/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
ADDED : மார் 12, 2025 09:22 PM
திருப்போரூர்:திருப்போரூர் அருகே தையூர் ஓ.எம்.ஆர்., சாலையின் ஓரத்தில், மழைநீர் வடிகால்வாய் உள்ளது.
இதில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று காலை கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபர் கால்வாய் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தும் போது, போதையில் கால்வாயில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், அவர் யார், எந்த ஊர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.