/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகத்தில் இளம்பெண்கள் இருவர் மாயம் மதுராந்தகத்தில் இளம்பெண்கள் இருவர் மாயம்
மதுராந்தகத்தில் இளம்பெண்கள் இருவர் மாயம்
மதுராந்தகத்தில் இளம்பெண்கள் இருவர் மாயம்
மதுராந்தகத்தில் இளம்பெண்கள் இருவர் மாயம்
ADDED : ஜூன் 17, 2024 03:06 AM
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே முன்னுாத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, 21, என்பவர், கடந்த 14-ம் தேதி காலை, வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின், மீண்டும் வீட்டுக்கு வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள இடங்களிலும், மற்ற உறவினர் வீடுகளிலும் விசாரித்துஉள்ளனர்.
அதன் பின்னும், தமிழ்ச்செல்வி குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால், நேற்று, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதேபோல், மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட பழைய மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாரணி, 26, என்பவர், கடந்த 14ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்று உள்ளார்.
பின், மீண்டும் வீட்டுக்கு வராததால், பெற்றோர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இரண்டு சம்பவங்களிலும், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார், காணாமல் போன இரு இளம்பெண்களை தேடி வருகின்றனர்.