/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டூ - வீலரில் மதுபாட்டில் கடத்திய பெண் கைது; கணவருக்கு வலை டூ - வீலரில் மதுபாட்டில் கடத்திய பெண் கைது; கணவருக்கு வலை
டூ - வீலரில் மதுபாட்டில் கடத்திய பெண் கைது; கணவருக்கு வலை
டூ - வீலரில் மதுபாட்டில் கடத்திய பெண் கைது; கணவருக்கு வலை
டூ - வீலரில் மதுபாட்டில் கடத்திய பெண் கைது; கணவருக்கு வலை
ADDED : ஜூன் 23, 2024 03:55 AM
சூணாம்பேடு : பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக, சூணாம்பேடு போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, நேற்று காலை தொழுப்பேடு சாலையில், வெண்மாலகரம் பகுதியில் காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்ய முயன்ற போது, வாகனத்தை பாதியில் நிறுத்திவிட்டு, அதில் பயணித்த இருவரும் தப்பிக்க முயன்றனர்.தப்பிச் செல்ல முயன்ற பெண்னை போலீசார் பிடித்து விசாரித்ததில், ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்மணி, 34, என்பது தெரியவந்தது. பின், வாகனத்தை சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து 547 மது பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்ததது.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பொன்மணியை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பொன்மணியின் கணவர் விஜியை போலீசார் தேடி வருகின்றனர்.