/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது
டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது
டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது
டூ - வீலரில் மணல் கடத்தியவர் கைது
ADDED : ஜூன் 04, 2024 05:24 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, வில்லியம்பாக்கம் பாலாற்று படுகை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த நபர், போலீசாரை கண்டதும் ஓட முயன்றார்.
அவரை மடக்கி பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர், ஆத்துார் பக்தவச்சலம் நகரை சேர்ந்த புருஷோத்தமன், 32, என்பதும், பாலாற்றில் இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, புருஷோத்தமனை கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனம் மற்றும் 25 கிலோ எடை கொண்ட மூன்று மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.