/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மும்பை போலீஸ் என மிரட்டிய இருவர் கைது மும்பை போலீஸ் என மிரட்டிய இருவர் கைது
மும்பை போலீஸ் என மிரட்டிய இருவர் கைது
மும்பை போலீஸ் என மிரட்டிய இருவர் கைது
மும்பை போலீஸ் என மிரட்டிய இருவர் கைது
ADDED : ஜூலை 31, 2024 04:43 AM

சென்னை : சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த பெண்ணை, மும்பையில் உள்ள 'பெடெக்ஸ்' கூரியர் நிறுவனத்தில் இருந்து மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், மிரட்டியுள்ளார். 'உங்களுடைய ஆதார் கார்டு உபயோகித்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதில், போதை பொருட்கள் உள்ளன. இதுதொடர்பாக, மும்பை போலீஸ் உங்களிடம் விசாரிக்க உள்ளனர்' என கூறியுள்ளார்.
அதன் பின், மும்பை போலீஸ் எனக்கூறி தொடர்பு கொண்ட நபர், இப்பிரச்னையில் இருந்து வெளியில் வர, பணம் செலுத்தி உரிய சான்று காண்பிக்க வேண்டும். பின், செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.
பயந்து போன பெண், வங்கி கணக்கில் இருந்து, 3.64 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின் எந்தவித அழைப்பும் வராததை அடுத்து, ஏமாற்றப்பட்டதை உணர்தார். இதையடுத்து, கடந்த ஏப்., 6ம் தேதி கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் ஜோசப், 31 மற்றும் ரமீஸ், 31, என்பது தெரியவந்தது.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இரண்டு ஐ - போன்கள் உட்படநான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்து, தொடர்ந்துவிசாரிக்கின்றனர்.