/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஏ.டி.எம்., மைய கண்ணாடி உடைத்த இருவர் கைது ஏ.டி.எம்., மைய கண்ணாடி உடைத்த இருவர் கைது
ஏ.டி.எம்., மைய கண்ணாடி உடைத்த இருவர் கைது
ஏ.டி.எம்., மைய கண்ணாடி உடைத்த இருவர் கைது
ஏ.டி.எம்., மைய கண்ணாடி உடைத்த இருவர் கைது
ADDED : ஜூலை 23, 2024 09:33 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராம்பாளையம் பகுதியில் உள்ள கட்டடத்தில், தனியார் ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை, இந்த ஏ.டி.எம்., மையத்தின் முன்பக்க கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்ட அப்பகுதிவாசிகள், செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெரிய கற்கள் கொண்டு கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும், ஏ.டி.எம்., இயந்திரத்தை ஆய்வு செய்த போது, எந்த சேதாரமும் ஏற்படவில்லை என தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 21ம் தேதி இரவு, இந்த பகுதியில் இரண்டு இளைஞர்கள் சண்டையிட்டுக் கொண்டு, கற்களால் தாக்கிய போது, ஏ.டி.எம்., மைய கண்ணாடி கதவு உடைந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சண்டையில் ஈடுபட்ட செங்கல்பட்டு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், 24, மணிகண்டன், 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.