/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டூ - வீலரில் அமர்ந்து வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு டூ - வீலரில் அமர்ந்து வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
டூ - வீலரில் அமர்ந்து வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
டூ - வீலரில் அமர்ந்து வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
டூ - வீலரில் அமர்ந்து வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : ஜூன் 01, 2024 04:22 AM
மதுராந்தகம் : மதுராந்தகம், திருவள்ளுவர் தெரு தமிழ்நாடு ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஷீலா, 31. கருங்குழி நடுத்தெருவை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி, 32.இருவரும், மதுராந்தகத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளனர்.
நேற்று முன்தினம், யமஹா ஆல்பா இருசக்கரவாகனத்தில், செங்கல் பட்டு சென்று, ரயிலில் சென்னை சென்றுள்ளனர்.
பின், சென்னையில் இருந்து புதுத்துணிகள் எடுத்துக் கொண்டு, மீண்டும் செங்கல்பட்டு வந்து, அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் மதுராந்தகம் நோக்கி வந்துள்ளனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், படாளம் அருகே ஜோதிலட்சுமி இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வர, பின்னால் ஷீலா அமர்ந்து வந்துள்ளார்.
அப்போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், எதிர்பாராத நேரத்தில், ஷீலா கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்க செயினை பறித்து தப்பினர்.
இதுகுறித்து, நேற்று அளிக்கப்பட்ட புகாரின்படி, வழக்கு பதிந்த படாளம் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, செயின் பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.