/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
செங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
செங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
செங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
ADDED : ஜூன் 28, 2024 11:02 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்வது வழக்கம்.
நிர்வாகக் காரணங்களுக்காக, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - 11ன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி பிரிவு தலைமை மேலாளராக மாற்றப்பட்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - 1ன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - 11ன் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மீனாட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - 1ன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவுகளை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.