/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
செங்கையில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூன் 10, 2024 11:21 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த் துறையில், தாசில்தார்கள் பணியமைப்பில் நிர்வாக நலன் கருதி, இரண்டு தாசில்தார்களுக்கு பணியிட மாற்றமும், ஒரு தாசில்தாருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதில், திருப்போரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வெங்கட்ரமணன், திருக்கழுக்குன்றம் தாசில்தாராகவும், திருக்கழுக்குன்றம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பலதா, திருப்போரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் வேல்முருகனுக்கு, செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.