/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிராம தொழில் முனைவோருக்கு பயிற்சி கிராம தொழில் முனைவோருக்கு பயிற்சி
கிராம தொழில் முனைவோருக்கு பயிற்சி
கிராம தொழில் முனைவோருக்கு பயிற்சி
கிராம தொழில் முனைவோருக்கு பயிற்சி
ADDED : ஜூன் 20, 2024 09:18 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகவளாகத்தில், கிராம தொழில் முனைவோர் திட்டம் சார்பில், சமுதாய வள பயிற்றுனர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இதில், 59 ஊராட்சிகளை சேர்ந்த பள்ளிக்கல்வி முடித்த மற்றும் இளநிலை கல்வி பயின்ற மகளிர், எழுத்து தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ச்சி பெற்ற 30 பேர், கிராமங்கள்தோறும் சென்று, கிராம தொழில் முனைவோர்களை கண்டறிந்து, அவர்களின் சுய தொழிலை ஊக்கப்படுத்துதல் குறித்து, முதன்மை வழிகாட்டி விஜயலட்சுமி பயிற்சி அளித்தார்.
இந்நிகழ்வில், அச்சிறுபாக்கம் வட்டார மேலாளர் தானப்பன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.