/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர் வட்டார கைப்பந்து போட்டி திருப்போரூர் வட்டார கைப்பந்து போட்டி
திருப்போரூர் வட்டார கைப்பந்து போட்டி
திருப்போரூர் வட்டார கைப்பந்து போட்டி
திருப்போரூர் வட்டார கைப்பந்து போட்டி
ADDED : ஆக 02, 2024 07:12 AM
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் ஐ.ஐ.ஐ.டி., கல்லுாரி வளாகத்தில், வட்டார அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடந்தது. இதில், 10 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 14,17,19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில், மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 14 வயது ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், கேளம்பாக்கம் பி.கே.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். 17 வயது ஆண்கள் பிரிவில், திருப்போரூர் ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
அதன்பின் நடந்த, 19 வயது ஆண்கள் பிரிவில், கேளம்பாக்கம் பி.கே.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.