/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர் பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் வேலி அமைப்பு திருப்போரூர் பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் வேலி அமைப்பு
திருப்போரூர் பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் வேலி அமைப்பு
திருப்போரூர் பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் வேலி அமைப்பு
திருப்போரூர் பி.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் வேலி அமைப்பு
ADDED : ஜூலை 23, 2024 01:18 AM

திருப்போரூர்திருப்போரூரில் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம்,வட்டார கல்வி வள மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம், சிமென்ட் கிடங்கு ஆகியவைஅமைந்துள்ளன.
வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இங்கு, பல்வேறு வேலைகளுக்காக, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த வளாகம் சரியான பராமரிப்பில்லாமல், மோசமான நிலையில் இருந்தது. ஆங்காங்கே முள் செடிகள் வளர்ந்து, குப்பைக் கழிவுகள் குவிந்து புதர் மண்டி கிடந்தது.
மேலும், சமுக விரோதிகள் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதும், விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்போன்றவற்றை வீசிசெல்கின்றனர்.
இதனால், நாளுக்கு நாள் குப்பை கழிவுகள் குவிந்து அதிகரித்து வந்தது. அதேபோல், சுற்றுச்சுவர் ஓரம் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவந்தது.
எனவே, முக்கியமான அலுவலக வளாகத்தை துாய்மைப்படுத்த வேண்டும் என, சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, முதற்கட்டமாக பி.டி.ஓ., அலுவலக நிர்வாகம் சார்பில், தொழிலாளர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, குறிப்பிட்ட வளாகத்தை சுற்றிலும் வளர்ந்த செடிகளை அகற்றி துாய்மைப்படுத்தினர்.
பின், முதற்கட்டமாககுறிப்பிட்ட பகுதிக்குள்மட்டும், யாரும் நுழைந்து அசுத்தம் செய்யாமல் இருக்க, பாதுகாப்பு தடுப்பு வேலிஅமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.