/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர் இ -- சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் பழுதாவதால் அவதி திருப்போரூர் இ -- சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் பழுதாவதால் அவதி
திருப்போரூர் இ -- சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் பழுதாவதால் அவதி
திருப்போரூர் இ -- சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் பழுதாவதால் அவதி
திருப்போரூர் இ -- சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் பழுதாவதால் அவதி
ADDED : ஜூன் 12, 2024 01:28 AM

திருப்போரூர்:திருப்போரூர் தாலுகா அலுவலக தரைத்தளத்தில், இ -- சேவை மையம் உள்ளது. இங்கு, சான்றிதழ்கள் மற்றும் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
மேலும், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு விண்ணப்பித்தல், பாஸ்போர்ட் பதிவு கட்டணம், அடங்கல் பதிவேடு, சிட்டா என, வருவாய்துறை மற்றும் இதர அரசு துறைகள் சார்ந்த சேவைகளுக்கும் மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
சில திட்டங்களில், நேரடியாக இ -- சேவை மையம் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இங்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான விண்ணப்பங்கள், நேரடியாக அரசு இணையதளங்களில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இம்மையத்தில், அடிக்கடி, 'சர்வர்' பழுது ஏற்படுவதால், அனைத்து சேவைகளும் முடங்குகின்றன.
குறிப்பாக, ஒரு மாதமாக இந்த இ -- சேவை மையத்தில் சான்றிதழ் விண்ணப்பங்களை பதிவு செய்யவோ, பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பெறவோ முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
நாள்தோறும் மையத்துக்கு வந்து, வேலை முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள், இதர பள்ளி வகுப்பு சேர்க்கை மாணவர்கள் இருப்பிடம், வருமானம் போன்ற சான்றிதழ் தேவைக்காக, நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது.
எனவே, இ- - சேவை மையத்தில், அதிநவீன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொய்வில்லாமல் பணிகள் நடக்க, அரசு கேபிள், டிவி நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.