/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருக்கழுக்குன்றம் ஒன்றிய கூட்டம் நிர்வாக செலவுகளுக்கு ஒப்புதல் திருக்கழுக்குன்றம் ஒன்றிய கூட்டம் நிர்வாக செலவுகளுக்கு ஒப்புதல்
திருக்கழுக்குன்றம் ஒன்றிய கூட்டம் நிர்வாக செலவுகளுக்கு ஒப்புதல்
திருக்கழுக்குன்றம் ஒன்றிய கூட்டம் நிர்வாக செலவுகளுக்கு ஒப்புதல்
திருக்கழுக்குன்றம் ஒன்றிய கூட்டம் நிர்வாக செலவுகளுக்கு ஒப்புதல்
ADDED : ஜூன் 20, 2024 12:07 AM
திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், தலைவர் அரசு தலைமையில், நேற்று நடந்தது. கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
கல்பாக்கத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற வேக ஈனுலை நிகழ்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, 22,852 ரூபாய் செலவிட்டதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் உத்தரவில், 3 லட்சத்து 52,500 ரூபாய் மதிப்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வாங்கியது மற்றும் அவற்றை வினியோகிக்க 21,000 ரூபாய் செலவிட்டதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
வட்டார பகுதி அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, துவக்க, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், துாய்மைப் பணியாளர்களுக்கு, ஜன., முதல் ஏப்., வரை ஊதியமாக, 8.26 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தலைவர், அலுவலர்கள் வாகனங்களுக்கு டீசல் செலவு, அலுவலக நிர்வாகம், பிற பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு, ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில், வேறு எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவில்லை.