/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருக்கழுக்குன்றம் பள்ளி கட்டடம் சர்ச்சையால் பணிகள் முடக்கம் திருக்கழுக்குன்றம் பள்ளி கட்டடம் சர்ச்சையால் பணிகள் முடக்கம்
திருக்கழுக்குன்றம் பள்ளி கட்டடம் சர்ச்சையால் பணிகள் முடக்கம்
திருக்கழுக்குன்றம் பள்ளி கட்டடம் சர்ச்சையால் பணிகள் முடக்கம்
திருக்கழுக்குன்றம் பள்ளி கட்டடம் சர்ச்சையால் பணிகள் முடக்கம்
ADDED : ஜூன் 03, 2024 04:50 AM
திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரில், இப்பகுதியினர் கல்வி சேவைக்காக, அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி இயங்குகிறது.
இப்பள்ளியில் வகுப்பறை கட்டடம், மாணவர்களின் தேவைக்கேற்ப இல்லாததால், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, பெற்றோர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், பெருநிறுவன பொறுப்பு நிதி வாயிலாக வகுப்பறை கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது.
அணுமின் நிலைய நிர்வாகம், 1.47 கோடி ரூபாய் மதிப்பில், தரை, முதல், இரண்டாம் ஆகிய தளங்களில், தலா இரண்டு வகுப்பறைகளுடன் கட்டடம் கட்ட, சில மாதங்களுக்கு முன் பூமி பூஜையுடன் பணிகளை துவக்கியது.
கட்டட பரப்பு தேவைக் கேற்ப இடமில்லாததால், இட தேவைக்காக, பழைய சத்துணவு சமையலறை கட்டடத்தை இடிக்க முடிவெடுத்ததாக தெரிகிறது.
அதை இடிப்பது தொடர்பாக, அப்பகுதி வார்டு உறுப்பினரான அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நரசிம்மன் மற்றும் தி.மு.க.,வினர் இடையே சச்சரவு ஏற்பட்டது.
அதனால், கட்டடப் பணிகள் துவக்கப்படாமல், நான்கு மாதங்களாக முடங்கியுள்ளது. இதனால், கட்டட திட்டத்தை, வேறு பள்ளிக்கு மாற்ற பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.
இப்பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு கண்டு, கட்டுமானப் பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.