/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பொலம்பாக்கம் ஊராட்சி செயலரை தாக்கியவர் கைது பொலம்பாக்கம் ஊராட்சி செயலரை தாக்கியவர் கைது
பொலம்பாக்கம் ஊராட்சி செயலரை தாக்கியவர் கைது
பொலம்பாக்கம் ஊராட்சி செயலரை தாக்கியவர் கைது
பொலம்பாக்கம் ஊராட்சி செயலரை தாக்கியவர் கைது
ADDED : ஜூலை 04, 2024 10:32 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் ஊராட்சியில், கடந்த 2ம் தேதி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தேர்வு செய்வது குறித்த, சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி செயலர் முத்துராமன், 38, தலைமையில் நடந்தது.
அப்போது, பொலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர், 43, என்பவர், தீர்மான புத்தகத்தை புகைப்படம் எடுக்க கேட்டுள்ளார். அதற்கு அனுமதி மறுத்து, ஊராட்சி செயலர் முத்துராமன் தீர்மான புத்தகத்தை வழங்காததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அருகே இருந்த நாற்காலியால், ஊராட்சி செயலர் முத்துராமனை ஸ்ரீதர் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, ஊராட்சி செயலர் முத்துராமன் அளித்த புகாரின்படி, சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிந்துவிசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஸ்ரீதரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.