/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி
தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி
தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி
தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி
ADDED : ஜூன் 03, 2024 01:29 AM
தாம்பரம்:தாம்பரம் - மண்ணிவாக்கம் சாலையில், முடிச்சூர் அருகே நேற்று முன்தினம் இரவு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக ஒரு கார் சென்றது. சில வாகனங்கள் மீதும் மோதியது.
இதைக் கவனித்த இளைஞர் ஒருவர், 'பைக்'கில் விரட்டிச் சென்று, அந்த காரை நிறுத்தி முறையிட்டார். அவ்வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அந்த காரின் முன், 'போலீஸ்' என 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்தவர், மதுபோதையில் நிதானமின்றி இருந்துள்ளார். தன்னை போலீஸ்காரர் என அவர் கூறியுள்ளார்.
ஓட்டுனர் இருக்கையில் காவலர் சீருடை இருந்தது. அதில் பொருத்தியிருந்த 'பேட்ஜில்' ஸ்ரீராமதுரை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதிக மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.