/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரம் வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரம்
வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரம்
வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரம்
வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரம்
ADDED : ஜூன் 24, 2024 06:17 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் மதியரசன், 40; பாட்டில்கள் சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர், நேற்று காலை, செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கே.கே., நகர் பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில் சாப்பிட சென்றார். மீனுடன் கூடிய சாப்பாடுக்கு 'ஆர்டர்' செய்தார்.
மீனில் காரம் குறைவாக இருந்ததால், ஹோட்டல் உரிமையாளர் குமார், 47, என்பவரிடம், மிளகு துாள் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, கோபமடைந்த குமார், அங்கு கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய்யை இரண்டு கரண்டி எடுத்து, மதியரசன் மார்பின் மீது ஊற்றினார்.
எரிச்சலில் துடித்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மதியரசனுக்கு 25 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.