/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
ADDED : ஜூன் 16, 2024 12:17 AM
தாம்பரம்:பல்லாவரம் -- குரோம்பேட்டை இடையே தண்டவாளத்தில் சிறுவன் உடல் கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாம்பரம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சோனி, 16, என்பது தெரியவந்தது. விழுப்புரத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக, ஆமதாபாத் - திருச்சி சிறப்பு ரயிலில், உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்த ஆகாஷ் சோனி, படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.