ADDED : ஆக 02, 2024 01:53 AM
சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த இல்லீடு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 9. இல்லீடு அரசு ஆரம்பப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த போது, தமிழ்செல்வன் காலில் விஷபூச்சி கடித்துள்ளது.
அதனால், சிறிது நேரத்திற்கு பின், தமிழ்செல்வனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே, தமிழ்செல்வன் உயிரிழந்தார்.
சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.