Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மேல்நிலை பிரிவில் தமிழ் வழி பாடங்கள்; ஆங்கில வழியில் பயின்றோருக்கு சிக்கல்

மேல்நிலை பிரிவில் தமிழ் வழி பாடங்கள்; ஆங்கில வழியில் பயின்றோருக்கு சிக்கல்

மேல்நிலை பிரிவில் தமிழ் வழி பாடங்கள்; ஆங்கில வழியில் பயின்றோருக்கு சிக்கல்

மேல்நிலை பிரிவில் தமிழ் வழி பாடங்கள்; ஆங்கில வழியில் பயின்றோருக்கு சிக்கல்

ADDED : ஜூன் 04, 2024 05:23 AM


Google News
மாமல்லபுரம் : அரசுப் பள்ளிகளில் கல்வி மேம்பாடு கருதி, தமிழ், ஆங்கிலம் ஆகிய வழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயின்ற மாணவ - மாணவியர், அதே பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் பயில விரும்புகின்றனர்.

அப்பள்ளியில், தாம் விரும்பும் பாடப்பிரிவு ஆங்கில வழியில் இல்லாத சூழலில், அதே பாடப்பிரிவு ஆங்கில வழி கல்வியில் உள்ள பள்ளியை அறிந்து, அங்கு சேருவதில் சிக்கல் ஏற்படுவதாக, அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை நடைமுறைப்படுத்திய அரசு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்காததால், பெரும்பாலான மேல்நிலைப்பள்ளிகளில், கணினி அறிவியல், வணிகவியல், உயிரியல் என, முக்கிய பாடப்பிரிவுகள், தமிழ் வழியில் மட்டுமே உள்ளன.

அதனால், 10ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், மேல்நிலையில் சிக்கலை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து, சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த கல்வி ஆர்வலர் க.ஆனந்த் கூறியதாவது:

மாநிலம் முழுதுமே, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகளின் முக்கிய பாடப்பிரிவுகள், ஆங்கில வழியில் இல்லை.

சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில வழியில் 10ம் வகுப்பை முடித்தவர், அதே பள்ளியில் கணினி அறிவியல் படிக்க விரும்புகிறார்.

ஆனால், அங்கு இப்பாடப்பிரிவு ஆங்கில வழியில் இல்லை. தமிழ் வழியில் தான் உள்ளது. உயர்நிலை வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்தவர், மேல்நிலை வகுப்பை தமிழ் வழியிலா படிக்க முடியும்?

இப்பாடப்பிரிவு, ஆங்கில வழியில் உள்ள வேறு பகுதி பள்ளியில் விண்ணப்பித்தால், அங்கு படித்தவருக்கே முன்னுரிமை அளித்து, மற்றவர்களை தவிர்க்கும் சிக்கல் ஏற்படுகிறது.

ஆங்கில வழியில் உயர்நிலை பயின்றவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, தாங்கள் விரும்பும் பாடப்பிரிவை, ஆங்கில வழியில் பயில அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us