/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கல்பட்டு தடத்தில் புறநகர் ரயில்கள் ரத்து செங்கல்பட்டு தடத்தில் புறநகர் ரயில்கள் ரத்து
செங்கல்பட்டு தடத்தில் புறநகர் ரயில்கள் ரத்து
செங்கல்பட்டு தடத்தில் புறநகர் ரயில்கள் ரத்து
செங்கல்பட்டு தடத்தில் புறநகர் ரயில்கள் ரத்து
ADDED : ஜூலை 28, 2024 01:31 AM
சென்னை:சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு மார்க்கத்தில், இன்று காலை 7:45 மணி முதல் இரவு 7:45 மணி வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு மாற்றாக, சென்னை எழும்பூரில் இருந்து காலை 8:00 மணி முதல் இரவு 7:35 வரை பயணியர் சிறப்புரயில்கள் இயக்கப்படஉள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய இடங்களுக்கு, இன்று இரவு 10:40, 11:05, 11:30. 11:59 மணிக்கு, பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, எழும்பூர் ரயில்வே பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடப்பதால், விரைவு, மின்சார ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து- தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு இன்று மதியம் 3:35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது.கடற்கரை ரயில் நிலையத்தில் நிற்கும்
செங்கல்பட்டு -- காக்கிநாடாவுக்கு இன்று மாலை 4:00 மணிக்கு புறப்படும் சர்கார் விரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது. கடற்கரை ரயில் நிலைத்தில்நிற்கும்.
மேலும், மூன்று விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.