/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பஸ் ஜன்னலில் ஏறி பயணம் மருதேரியில் மாணவர்கள் அடாவடி அரசு பஸ் ஜன்னலில் ஏறி பயணம் மருதேரியில் மாணவர்கள் அடாவடி
அரசு பஸ் ஜன்னலில் ஏறி பயணம் மருதேரியில் மாணவர்கள் அடாவடி
அரசு பஸ் ஜன்னலில் ஏறி பயணம் மருதேரியில் மாணவர்கள் அடாவடி
அரசு பஸ் ஜன்னலில் ஏறி பயணம் மருதேரியில் மாணவர்கள் அடாவடி
ADDED : ஜூலை 20, 2024 05:56 AM

மறைமலை நகர : சிங்கபெருமாள் கோவில் -- மருதேரி தடத்தில், 60 எம்/ஏ மாநகர் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை மருதேரி, கருநிலம், கோவிந்தாபுரம், மெல்ரோசாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள், சிங்கபெருமாள் கோவில் வர பயன்படுத்துகின்றனர்.
இந்த பேருந்தில், காலை நேரத்தில் பயணிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இதில் செல்லும் மாணவர்கள், பேருந்து காலியாக இருந்தாலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதாக சக பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
இந்த பேருந்தில், மருதேரி மற்றும் கருநிலம் கிராமங்களில் இருந்து, திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிக்கும், சிங்கபெருமாள் கோவில், மெல்ரோசாபுரம் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இவர்கள் பேருந்து படிக்கட்டுகள், ஜன்னல்களில் ஏறி, சாகச பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நடத்துனர் மற்றும் டிரைவர்கள் தட்டிக் கேட்கும் போது, அவர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
இந்த சாலை, அதிக வளைவுகள் கொண்ட குறுகலாக உள்ளது. மேலும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும் கடக்கின்றன.
அதனால், இது போல் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. இது போல் பயணம் செய்யும் மாணவர்களின் பெற்றோர், உரிய அறிவுரை கூறி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகமும் இது போன்று பயணம் மேற்கொள்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.