/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இலங்கை, அந்தமான் விமானங்கள் சூறாவளி காற்றால் ரத்து இலங்கை, அந்தமான் விமானங்கள் சூறாவளி காற்றால் ரத்து
இலங்கை, அந்தமான் விமானங்கள் சூறாவளி காற்றால் ரத்து
இலங்கை, அந்தமான் விமானங்கள் சூறாவளி காற்றால் ரத்து
இலங்கை, அந்தமான் விமானங்கள் சூறாவளி காற்றால் ரத்து
ADDED : ஜூலை 28, 2024 01:21 AM
சென்னை:சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு மதியம் 12:00 மணிக்கும், அங்கிருந்து சென்னைக்குமதியம் 3:45 மணிக்கும், ஏர் இந்தியா பயணியர்விமானம் இயக்கப்படு கிறது.
சென்னையில் நேற்று, நிர்வாகக் காரணங்களால் வருகை, புறப்பாடு என, மேற்கண்ட விமானத்தின் இரண்டு சேவை ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான்செல்லும் ஏர் இந்தியாபயணியர் விமானம், நேற்று காலை 5:15 மணிக்கு 98 பயணியருடன் புறப்பட்டு சென்றது.
அந்தமான் வான் வெளியை நெருங்கும்போது பலமாக சூறைக்காற்று வீசியது; வானிலை யும் மோசமடைந்து காணப்பட்டது.
இதனால் அங்கு,விமானம் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது.வெகுநேரம் கழித்தும் வானிலை சரியாகவில்லை.
எனவே விமானி, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, நிலையை விளக்கினார். அவர்கள், விமானத்தை சென்னைக்கு திருப்பும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து அந்த விமானம், நேற்று மதியம் சென்னைக்கு மீண்டும் வந்தது. பயணமும் ரத்து செய்யப்பட்டது.