/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் மின் தடை பிரச்னைக்கு தீர்வு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் மின் தடை பிரச்னைக்கு தீர்வு
செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் மின் தடை பிரச்னைக்கு தீர்வு
செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் மின் தடை பிரச்னைக்கு தீர்வு
செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் மின் தடை பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஜூன் 04, 2024 05:27 AM
செம்மஞ்சேரி: சென்னையில் பல்வேறு பகுதிகளில், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டது. குறிப்பாக, செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் கட்ட பள்ளம் தோண்டியபோது, மின் கேபிள்கள் சேதமடைந்தன.
ஒப்பந்த நிறுவனங்கள், சீரமைத்து கொடுக்காததால், அதிக மின்அழுத்தம் காரணமாக பல சேதமடைந்த கேபிள்கள் வெடித்து மின் தடை ஏற்பட்டது.
ஒரு நாளில், 13 மணி நேரம் வரை மின் தடை நீடித்ததால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இளநிலை பொறியாளர் இல்லாததால், புகார்களை உடனுக்குடன் சரி செய்ய முடியவில்லை.
அதேபோல், சித்தாலப்பாக்கம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியிலும், மின் தடை தொடர்ந்து இருந்தது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, 2 கி.மீ., துாரம் சேதமடைந்த கேபிள்களை மாற்றி, புதிய கேபிள் பதிக்கப்பட்டது; இளநிலை பொறியாளர் நியமனம் நடந்தது; புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இதையடுத்து, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட மின் தடைக்கு விடிவு கிடைத்தது.
சீரான மின்வினியோகம் வழங்கும் வகையில், தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக, மின் வாரியஅதிகாரிகள் கூறினர்.