/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின் பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
ADDED : ஜூன் 04, 2024 05:26 AM
சென்னை : சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளியில் பேராசிரியராக பணியாற்றியவர் ஸ்ரீஜித் கிருஷ்ணா.
இதே பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவி ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக புகார் அளித்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் 22ல் கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு, நீதிபதி தமிழ்செல்வி முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி,''கைது செய்யப்பட்டவரை, இன்னும் காவலில் எடுத்துபோலீசார் விசாரிக்கவில்லை.
ஒரு மாணவியை தவிர, வேறு யாரும் புகார் அளிக்கவில்லை. 28 ஆண்டுகளுக்கு முன், சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.
மனுதாரருக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்கும் விதமாக, இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மனுதாரருக்கு எதிராக மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளதாகவும், இன்னும் சிலர் புகார் அளிக்க உள்ளதாகவும், ஜாமின் வழங்க கூடாது எனவும் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களுக்கு பின், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதிபெறும்படி, நீதிபதிநிபந்தனை விதித்தார்.