/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரூ.5 கோடி மதிப்பு நிலம் ஏகாட்டூரில் அதிரடி மீட்பு ரூ.5 கோடி மதிப்பு நிலம் ஏகாட்டூரில் அதிரடி மீட்பு
ரூ.5 கோடி மதிப்பு நிலம் ஏகாட்டூரில் அதிரடி மீட்பு
ரூ.5 கோடி மதிப்பு நிலம் ஏகாட்டூரில் அதிரடி மீட்பு
ரூ.5 கோடி மதிப்பு நிலம் ஏகாட்டூரில் அதிரடி மீட்பு
ADDED : ஜூலை 21, 2024 06:14 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த சிறுசேரி சிப்காட் நுழைவாயிலை ஒட்டி, தனியாருக்கு சொந்தமான வணிக கடைகள், வீட்டு மனைகள் உள்ளன.
இதில், சில பகுதிகள் சிப்காட்டுக்கு சொந்தமானது. இது தொடர்பாக, கட்டட உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றும் படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக சிப்காட் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் எதிரொலியாக, ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நேற்று சிப்காட் நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பில் இருந்த கட்டடம் மற்றும் வீட்டுமனை உள்ளிட்டவற்றை அகற்றியது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.