/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையோரம் காய்ந்த மரம் வேடந்தாங்கலில் ஆபத்து சாலையோரம் காய்ந்த மரம் வேடந்தாங்கலில் ஆபத்து
சாலையோரம் காய்ந்த மரம் வேடந்தாங்கலில் ஆபத்து
சாலையோரம் காய்ந்த மரம் வேடந்தாங்கலில் ஆபத்து
சாலையோரம் காய்ந்த மரம் வேடந்தாங்கலில் ஆபத்து
ADDED : ஜூலை 31, 2024 02:45 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சி உள்ளது. மதுராந்தகத்திலிருந்து புழுதிவாக்கம் வழியாக, வேடந்தாங்கல் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இங்கு, வேடந்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், சாலையோரம் காட்டுவா மரம் ஒன்று, காய்ந்து போய் உள்ளது.
மேலும், மின் ஒயர்களும் அப்பகுதியில் கடந்து செல்கின்றன.
தற்போது, காற்று அதிகமாக வீசுவதால், காய்ந்த மரத்தில் இருந்து, அவ்வப்போது கிளைகள் முறிந்து கீழே விழுகின்றன. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், காய்ந்து போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.