/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை உள்வட்ட பகுதியினர் ஜமாபந்தியில் மனு அளிக்கலாம் மாமல்லை உள்வட்ட பகுதியினர் ஜமாபந்தியில் மனு அளிக்கலாம்
மாமல்லை உள்வட்ட பகுதியினர் ஜமாபந்தியில் மனு அளிக்கலாம்
மாமல்லை உள்வட்ட பகுதியினர் ஜமாபந்தியில் மனு அளிக்கலாம்
மாமல்லை உள்வட்ட பகுதியினர் ஜமாபந்தியில் மனு அளிக்கலாம்
ADDED : ஜூன் 11, 2024 04:00 PM
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் தாலுகாவின் 1433ம் பசலி ஜமாபந்தி வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு தலைமையில், இன்று துவங்குகிறது. ஜூன் 12, 13, 14, 18, 19, 20, 21, 25 ஆகிய நாட்களில், இங்கு ஜமாபந்தி நடக்கிறது.
நிகழ்ச்சி நாட்களில், காலை 9:00 மணிக்கு கோரிக்கை மனுக்கள் பெறப்படும். பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, பொதுமக்கள் அந்தந்த பகுதிக்குரிய நாளில் மனுக்கள் அளிக்கலாம்.
இன்று நடக்கும் ஜமாபந்தியில், மாமல்லபுரம் உள்வட்டத்தைச் சேர்ந்த மாமல்லபுரம், கொக்கிலமேடு, குன்னத்துார், ஆரம்பாக்கம், நெய்குப்பி, வெங்கப்பாக்கம், பூந்தண்டலம், நரசங்குப்பம், நல்லுார், ஆமைப்பாக்கம், நத்தம் கரியச்சேரி, எடையூர் ஆகிய கிராம மக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
நாளை நடக்கும் ஜமாபந்தியில், பூஞ்சேரி, கடம்பாடி, மேலகுப்பம், மணமை, பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான்பிள்ளைபெற்றாள், குழிப்பாந்தண்டலம், எச்சூர் ஆகிய கிராம மக்களும், திருக்கழுக்குன்றம் உள்வட்டத்தைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் அ, ஆ பகுதிகள், நாவலுார், ருத்திரகோட்டி ஆகிய கிராம மக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.