/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிணற்றில் தவறி விழுந்த கீரிப்பிள்ளை மீட்பு கிணற்றில் தவறி விழுந்த கீரிப்பிள்ளை மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த கீரிப்பிள்ளை மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த கீரிப்பிள்ளை மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த கீரிப்பிள்ளை மீட்பு
ADDED : ஜூன் 21, 2024 01:51 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில், திறந்த நிலையில் நீரின்றி வறண்ட, 40 அடி ஆழமுள்ள கிணறுஉள்ளது.
அவ்வழியே சென்றவர்கள், கிணற்றுக்குள் இருந்து வினோதமான சப்தம் வருவதைக் கேட்டு, கிணற்றுக்குள் பார்த்தனர்.
அப்போது, தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்த கீரிப்பிள்ளை ஒன்று, மேலே வரஇயலாமல் முனகியபடி தவித்துக் கொண்டிருந்தது.
இது குறித்து, மறைமலை நகர் தீயணைப்புமற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி, தீயணைப்பு நிலைய மேலாளர் கார்த்திகேயன்தலைமையில், நான்கு பேர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், கீரிப்பிள்ளையை பாதுகாப்பாக மீட்டு, வெளியே கொண்டு வந்து, காட்டுப் பகுதியில் விடுவித்தனர்.