/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கத்திகளுடன் ஆட்டோவில் வந்த ஐந்து வாலிபர்களுக்கு காப்பு கத்திகளுடன் ஆட்டோவில் வந்த ஐந்து வாலிபர்களுக்கு காப்பு
கத்திகளுடன் ஆட்டோவில் வந்த ஐந்து வாலிபர்களுக்கு காப்பு
கத்திகளுடன் ஆட்டோவில் வந்த ஐந்து வாலிபர்களுக்கு காப்பு
கத்திகளுடன் ஆட்டோவில் வந்த ஐந்து வாலிபர்களுக்கு காப்பு
ADDED : ஜூன் 17, 2024 03:15 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று முன்தினம் மாலை, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், அவ்வழியே சென்ற வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது, மாமல்லபுரம் நோக்கி ஆட்டோவில் வந்தவர்கள், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பி தப்ப முயன்றனர்.
போலீசார் துரிதமாக செயல்பட்டு, ஆட்டோவில் வந்த ஐந்து பேரையும் மடக்கி பிடித்தனர். பின், ஆட்டோவை சோதனை செய்த போது, பயணியர் இருக்கையின்கீழ், நான்கு பெரிய கத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அவர்களை விசாரித்தபோது, குன்றத்துார் தாலுகா, ஒரத்துாரைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன்கள் பிரதீப், 21, பிரவீன், 23, பாஸ்கர் மகன் மகேஷ்குமார், 22, துலுக்கானம் மகன் மோகன், 23, காட்டாங்கொளத்துார், சிறுவஞ்சூரைச் சேர்ந்த அருள் மகன் குமார், 24, என்பது தெரிந்தது.
மேலும், ஓட்டேரி காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை வழக்கில், பிரதீப்பிற்கு தொடர்புள்ளதும் தெரிந்தது.
மாமல்லபுரம் போலீசார், நேற்று அவர்களை கைது செய்து, ஆட்டோ, கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.