/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 17, 2024 04:12 PM
செய்யூர் : செய்யூர் பஜார் பகுதியில், மூன்று அரசு பள்ளிகள் மற்றும் எட்டு தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு, புத்துார், அம்மனுார், செங்காட்டூர், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் சைக்கிள், வேன், பேருந்துகள் வாயிலாக, பள்ளிக்கு வந்து செல்கின்றனர். செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுகின்றன.
கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து, லாரிகள் வாயிலாக ஜல்லிக்கற்கள் மற்றும் எம் - சாண்ட் ஆகியவை, கட்டுமானப் பணிகளுக்காக, சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தினசரி அதிகப்படியான லாரிகள் செய்யூர் பஜார் பகுதியில் செல்வதால், காலை மற்றும் மாலை வேலைகளில், பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல கடுமையாக அவதிப்படுகின்றனர்.
ஆகையால், காலை, மாலை வேளைகளில், செய்யூர் பஜார் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.