/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கேளம்பாக்கம் வீராணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுகோள் கேளம்பாக்கம் வீராணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுகோள்
கேளம்பாக்கம் வீராணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுகோள்
கேளம்பாக்கம் வீராணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுகோள்
கேளம்பாக்கம் வீராணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுகோள்
ADDED : ஜூன் 23, 2024 04:06 PM
திருப்போரூர்:
சென்னையை ஒட்டி வளர்ந்து வரும் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்லுாரிகள் உள்ளன.
இதனால், தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை நிமித்தமாக கேளம்பாக்கம் வழியாக கடந்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி, திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து, சென்னை, தாம்பரம் செல்வோரும், கேளம்பாக்கம் வழியாகவே செல்கின்றனர்.
இதனால், கேளம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தினந்தோறும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.
கேளம்பாக்கம் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கேளம்பாக்கம் வழியாக, 1 கி.மீ.,ல் செல்லும் வீராணம் சாலை, கடந்த 2018ம் ஆண்டு முதற்கட்டமாக மேம்படுத்தப்பட்டது.
எனினும், குறுகிய அளவு, வணிகக் கடைகள் அதிகரிப்பு, போக்குவரத்து அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால், வீராணம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
வீராணம் சாலை ஓரம் உள்ள வணிக கடைகளுக்கு பொருட்களை இறக்க வாகனங்கள், சாலையோரத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.
எனவே, வீராணம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.