/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை உயர்கோபுர மின் விளக்கு சீரமைப்பு மாமல்லை உயர்கோபுர மின் விளக்கு சீரமைப்பு
மாமல்லை உயர்கோபுர மின் விளக்கு சீரமைப்பு
மாமல்லை உயர்கோபுர மின் விளக்கு சீரமைப்பு
மாமல்லை உயர்கோபுர மின் விளக்கு சீரமைப்பு
ADDED : ஜூன் 28, 2024 02:05 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் முக்கிய சுற்றுலா பகுதி. இங்குள்ள சிற்பங்களைக் காண வரும் சுற்றுலா பயணியரின்எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
பயணியர் ஊர் திரும்பவும், உள்ளூர் பயணியர் வெளியூர் செல்லவும், தினசரி மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில், இரவு வரை நுாற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
இப்பகுதி, ஸ்தலசயன பெருமாள் கோவில் முகப்பு நுழைவாயில் என்பதால், இவ்வழியில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டமும் உள்ளது.
இத்தகைய பகுதியில், பல மாதங்களாக மின் விளக்குகள் பழுதடைந்து, இருளில் மூழ்கியிருந்தது. பயணியர் உள்ளிட்டோர் அவதிக்குள்ளானது குறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையத்தில் பழுதாகியிருந்த உயர்கோபுர மின் விளக்குகளை மாற்றி, சீரமைக்கப்பட்டது.