/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அகற்றப்பட்ட கன்டெய்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட கன்டெய்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு
அகற்றப்பட்ட கன்டெய்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு
அகற்றப்பட்ட கன்டெய்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு
அகற்றப்பட்ட கன்டெய்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 09, 2024 11:15 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தனியார் தொழில் நிறுவனத்தை சேர்ந்தோர், சாலையோரம் ஆக்கிரமித்து, கான்கிரீட் மேடை அமைத்து கன்டெய்னர் ஒன்றை வைத்தனர்.
கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன பயணியர் ஒதுங்கும் வகையில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து கன்டெய்னர் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
அதுமட்டுமின்றி, அம்மன் கோவிலை பக்தர்கள் வலம் வரும் பாதைக்கும், கன்டெய்னர் இடையூறாக இருந்தது.
இதுகுறித்து, இதற்கு முன் வருவாய்த் துறையினரிடம் முறையிடப்பட்டு, இரண்டு முறை கன்டெய்னர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் முறையாக அகற்றியபோது, அதை திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
பல மாதங்கள் அங்கேயே வைக்கப்பட்டிருந்தது. அதை தற்போது மீட்டுள்ள அதன் உரிமையாளர், மீண்டும் பூஞ்சேரி சாலை பகுதியில், பழைய இடத்திலேயே ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மீண்டும் மீண்டும் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்படும் கன்டெய்னரை நிரந்தரமாக அகற்றவும், அதன் உரிமையாளர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.