/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மறைமலை நகர் சாலையில் மணல் குவியல்கள் அகற்றம் மறைமலை நகர் சாலையில் மணல் குவியல்கள் அகற்றம்
மறைமலை நகர் சாலையில் மணல் குவியல்கள் அகற்றம்
மறைமலை நகர் சாலையில் மணல் குவியல்கள் அகற்றம்
மறைமலை நகர் சாலையில் மணல் குவியல்கள் அகற்றம்
ADDED : ஜூன் 12, 2024 01:34 AM

மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங் கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், இருபுறமும் சாலையில் மணல் திட்டுக்கள் குவிந்து காணப்படுகின்றன.
ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிக அளவில் ஏற்றிச் செல்வதால், கற்கள் சாலையில் பல்வேறு இடங்களில் சிதறி காணப்பட்டன.
இதில், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி, கீழே விழுந்து பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, மறைமலை நகர் போக்கு வரத்து போலீசார், மறைமலை நகர் பகுதியில், சாலையில் படிந்து கிடந்த மணல் திட்டுக்கள் மற்றும்விபத்துகளின் போது உடைந்த வாகனங்களின் கண்ணாடி துண்டுகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, நேற்றுஅகற்றும் பணியில் ஈடுபட்டனர்.