Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளி மாணவ- - மாணவியருக்கு வட்டார அளவில் எறிபந்து போட்டி

பள்ளி மாணவ- - மாணவியருக்கு வட்டார அளவில் எறிபந்து போட்டி

பள்ளி மாணவ- - மாணவியருக்கு வட்டார அளவில் எறிபந்து போட்டி

பள்ளி மாணவ- - மாணவியருக்கு வட்டார அளவில் எறிபந்து போட்டி

ADDED : ஜூலை 29, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
செய்யூர் : அச்சிறுபாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட கடப்பாக்கம் தனியார்பள்ளியில், பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ- - மாணவியருக்கான எறிபந்து போட்டி நடந்தது. இதில், 21 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- - மாணவியர்பங்கேற்றனர்.

நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவியருக்கான யு - 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில், மின்னல்சித்தாமூர் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியர், கடப்பாக்கம் கே.வி.எஸ்., மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியரை வீழ்த்தினர்.

யு - 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில், மேல்மருவத்துார் ஆதி பராசக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியர், அச்சிறுபாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியரை வீழ்த்தினர்.

யு - 19 வயது பிரிவு இறுதிப்போட்டியில், பூரியம்பாக்கம் அசேபா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியரை வீழ்த்தி, போரூர், செயின்ட் ஜோசப் மெட்ரிக் குலேஷன் பள்ளி மாணவியர் வென்றனர்.

மாணவர்களுக்கான யு - 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில், கே.வி.எஸ்., மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள், மின்னல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை வீழ்த்தினர்.

யு - 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில், ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், அச்சிறுபாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் குலேஷன் பள்ளி மாணவர்களை வீழ்த்தினர்.

யு - 19 வயது பிரிவு இறுதிப்போட்டியில், கே.வி.எஸ்., மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள், போரூர், செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களை வீழ்த்தினர்.

இதில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியர், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us