/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குரோம்பேட்டையில் 1 ஏக்கர் நிலம் மீட்பு குரோம்பேட்டையில் 1 ஏக்கர் நிலம் மீட்பு
குரோம்பேட்டையில் 1 ஏக்கர் நிலம் மீட்பு
குரோம்பேட்டையில் 1 ஏக்கர் நிலம் மீட்பு
குரோம்பேட்டையில் 1 ஏக்கர் நிலம் மீட்பு
ADDED : ஜூலை 16, 2024 04:33 AM

குரோம்பேட்டை : குரோம்பேட்டையில், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 1 ஏக்கர் நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
குரோம்பேட்டை, நெமிலிச்சேரியில், அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 1 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த நிலத்தில், வீடு, தோட்டம், கிணறு, சுற்றுச்சுவர் போன்ற ஆக்கிரமிப்புகள் இருந்தன.
இது தொடர்பாக, போக்குவரத்து கழக அதிகாரிகள், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு, போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்குமாறு, கலெக்டர் உத்தரவிட்டார்.
இதன்படி, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று மதியம், போலீஸ் பாதுகாப்புடன், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.