/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தென்சென்னையில் ரேஷன் பொருட்கள் இன்று கிடைக்காது தென்சென்னையில் ரேஷன் பொருட்கள் இன்று கிடைக்காது
தென்சென்னையில் ரேஷன் பொருட்கள் இன்று கிடைக்காது
தென்சென்னையில் ரேஷன் பொருட்கள் இன்று கிடைக்காது
தென்சென்னையில் ரேஷன் பொருட்கள் இன்று கிடைக்காது
ADDED : ஜூன் 04, 2024 05:27 AM
சென்னை : தமிழகம் முழுதும் உள்ள, 35,750 ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவிகள் மாற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி,தற்போது, விரல் ரேகை, பிரின்டர் சாதனம், விழித்திரையுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வைக்கும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில், தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர், சோழிங்கநல்லுார், சைதாப்பேட்டை, தாம்பரம் உட்பட, 9 மண்டலங்களில் உள்ள, 898 ரேஷன்கடைகளில்இன்றும், நாளையும் புதிய கருவிகள் வைக்கும் பணி நடக்கிறது.
இதனால், அந்த கடைகளில் இரு நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், வரும், 6ம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும்என்றும், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.