/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
ADDED : ஜூன் 16, 2024 12:24 AM

திருப்போரூர்:திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய தண்டரை கிராமத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நேற்று நடந்தது.
இதில், திருப்போரூர் வட்ட வழங்கல் அலுவலர் தமிழழகன் தலைமை தாங்கினார். முகாமில், பெயர் சேர்த்தல், மொபைல் போன் எண் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட 21 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், தகுதியான அனைத்து பயனாளிகளின் மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. இதில், தண்டரை ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி, வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.