/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவருக்கு காப்பு அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவருக்கு காப்பு
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவருக்கு காப்பு
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவருக்கு காப்பு
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவருக்கு காப்பு
ADDED : ஜூன் 12, 2024 11:43 PM
செய்யூர்:புதுச்சேரியில் இருந்து சூணாம்பேடு வழியாக, சென்னை செல்லும் தடம் எண்: 83ஏ என்ற பேருந்தை ஓட்டுனர் தீபக், 28, நேற்று ஓட்டிச் சென்றார்.
சூணாம்பேடு ஆரவல்லி நகர் பகுதியில் பேருந்தை நிறுத்தி, பயணியரை இறக்கிக் கொண்டு இருந்தபோது, அந்த வழியாக சென்ற சூணாம்பேடு பகுதியை சேர்ந்த ராகேஷ், 24, என்பவர் பேருந்தின் பின் நின்று, தன் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுமாறு, தொடர்ந்து ஒலி எழுப்பியுள்ளார்.
இதனால், பேருந்து ஓட்டுனருக்கும், ராகேஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராகேஷ், பேருந்து ஓட்டுனரை கையால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, பேருந்து ஓட்டுனர் சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து, ராகேஷை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.