/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மக்கள் குறைதீர் கூட்டம் 476 மனுக்கள் விசாரணை மக்கள் குறைதீர் கூட்டம் 476 மனுக்கள் விசாரணை
மக்கள் குறைதீர் கூட்டம் 476 மனுக்கள் விசாரணை
மக்கள் குறைதீர் கூட்டம் 476 மனுக்கள் விசாரணை
மக்கள் குறைதீர் கூட்டம் 476 மனுக்கள் விசாரணை
ADDED : ஜூலை 09, 2024 06:07 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய, 476 மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கலெக்டரின் நேர்முகஉதவியாளர் நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள்பங்ககேற்றனர்.
இந்த முகாமில், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, பேருந்து வசதி, வேலை வாய்ப்பு, அரசு நேரடி கொள்முதல் நிலையம், வீடு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய,476 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
மதுராந்தகம் தாலுகா, அண்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர், இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
அதற்கு, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.