/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை சிற்ப கல்லுாரியில் பகுதி நேர பணி வாய்ப்பு மாமல்லை சிற்ப கல்லுாரியில் பகுதி நேர பணி வாய்ப்பு
மாமல்லை சிற்ப கல்லுாரியில் பகுதி நேர பணி வாய்ப்பு
மாமல்லை சிற்ப கல்லுாரியில் பகுதி நேர பணி வாய்ப்பு
மாமல்லை சிற்ப கல்லுாரியில் பகுதி நேர பணி வாய்ப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:41 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கலைக்கல்லுாரியில், மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில், பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்க, தமிழக கலை மற்றும் பண்பாட்டு துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, கட்டடக்கலை, கல், சுதை சிற்பக்கலைகள் ஆகிய பாடப்பிரிவுகளில்,தலா இரண்டு பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
உலோகம், மரம்சிற்பக்கலைகள், வண்ணக்கலை, தமிழ் மொழி ஆகிய பாடப்பிரிவு களில், தலா ஒருஆசிரியர் நியமிக்கப்படஉள்ளார். இதற்குவிருப்பம் உள்ளவர்கள், ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழிப்பாட விண்ணப்பதாரர், தமிழ் மொழி முதுகலைபட்டம் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்ற கலைப் பிரிவுகளுக்கு, மரபுக் கலைகளில், பி.எஸ்.சி., - பி.எப்.ஏ., - பிடெக்., ஆகிய பட்டங்களில், முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி, அதன்படி பணி நியமனம் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.