/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நெருக்கடியில் அரசு பள்ளி இடம் வழங்கியது ஊராட்சி நெருக்கடியில் அரசு பள்ளி இடம் வழங்கியது ஊராட்சி
நெருக்கடியில் அரசு பள்ளி இடம் வழங்கியது ஊராட்சி
நெருக்கடியில் அரசு பள்ளி இடம் வழங்கியது ஊராட்சி
நெருக்கடியில் அரசு பள்ளி இடம் வழங்கியது ஊராட்சி
ADDED : ஜூலை 31, 2024 02:40 AM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தில், 1941ம் ஆண்டு துவக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 1972ல், நடுநிலைப் பள்ளியாகவும், 2018ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால், பள்ளிக்கு வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை.
புதிய கட்டடமும் கட்ட முடியவில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்ததால், தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு, எப்போது விடிவு காலம் பிறக்கும் என, பெற்றோர் புலம்பி வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி சார்ந்த கிராம நத்தம் வகைப்பாட்டை சார்ந்த 18 சென்ட் இடத்தை அடையாளம் கண்டு, பள்ளிக்கு வழங்க ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின், மேற்கண்ட இடத்தை பள்ளிக்கு ஒப்படைக்க, ஊராட்சி தலைவர் அருள் வருவாய்த்துறைக்கு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாயிலாக, பள்ளிக்கென அடையாளம் காணப்பட்ட இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, அந்த இடத்தை பள்ளிக்கு ஒப்படைப்பது தொடர்பாக, திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன், டி.ஆர்.ஓ.,விற்கு பரிந்துரை செய்துள்ளார்.