/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரூ.27.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.27.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ரூ.27.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ரூ.27.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ரூ.27.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ADDED : ஜூன் 18, 2024 09:53 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி, இரண்டு மற்றும் நான்காவது வார்டில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், அங்குள்ள ஜோதி நகர் பகுதியில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 27.50 லட்சம் ரூபாய் செலவில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, அதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.