/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் சான்றளிக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு உத்தரவு கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் சான்றளிக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு உத்தரவு
கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் சான்றளிக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு உத்தரவு
கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் சான்றளிக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு உத்தரவு
கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் சான்றளிக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 10, 2024 02:28 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் கள்ளச்சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், எஸ்.பி., சாய் பிரணீத், சப்- - கலெக்டர் நாராயணசர்மா, கலால் உதவி கமிஷனர் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல்களை, தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர்கள், போலீசாருக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் விற்பனை இல்லை என, கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ் தர வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும். கடைகளில் விற்பனை குறைந்தால், அந்த பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதனை தடுக்க, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மது ஒழிப்பு மற்றும் போதைபொருள் தொடர்பாக, கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இப்பணிகளில், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.