Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொண்டமங்கலம் கோசாலையை முறையாக பராமரிக்க உத்தரவு

கொண்டமங்கலம் கோசாலையை முறையாக பராமரிக்க உத்தரவு

கொண்டமங்கலம் கோசாலையை முறையாக பராமரிக்க உத்தரவு

கொண்டமங்கலம் கோசாலையை முறையாக பராமரிக்க உத்தரவு

ADDED : ஜூன் 21, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்து, கால்நடைகளுக்கான தாது உப்பு கலவை வழங்கினார்.

தொடர்ந்து, கொண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள மாவட்ட கால்நடைகள் அடைக்கும் பட்டியான கோசாலையை பார்வையிட்டார்.

இதில், 72 மாடுகள் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றில், 56 மாடுகளின் உரிமையாளர்களுக்கு, தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, மாடுகள் ஒப்படைக்கப்பட்டன. தற்போது, 16 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அங்கு ஆய்வு செய்த கலெக்டர் அருண்ராஜ், கால்நடைகளுக்கான சுற்றுச்சூழல், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், தேவையான தீவனபுல் வளர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குனர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் கிராமத்தில் நடந்த முகாமில் பங்கேற்ற கலெக்டரிடம், அரசு சார்பில் கொட்டகை அமைக்க நிதியுதவி அளிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மனு அளித்தனர். அதற்கு, உடனடி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

பெருமாட்டுநல்லுார் ஊராட்சி பாண்டூரில் நடந்த முகாமில், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு, இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், நந்திவரம் கால்நடை மருத்துவர் சீனிவாசன் தலைமையில்,மாடு வளர்ப்போர் வீடுகளுக்கே சென்று, 150-க்கும்மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசிசெலுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us