ADDED : ஜூலை 11, 2024 12:37 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் ரயில் தடத்தில், வில்லியம்பாக்கம் பகுதியில் நேற்று காலைமின்சார ரயிலில்அடிபட்டு அடையாளம் தெரியாதநிலையில் ஆண்சடலம் கிடப்பதாகசெங்கல்பட்டு ரயில்வேபோலீசாருக்குதகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.