ADDED : ஜூலை 12, 2024 12:54 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியைச் சேர்ந்த சுபா என்பவரின் வீட்டில், கடந்த மார்ச் 30ம் தேதி 3 சவரன் நகை திருடுபோனது. பையனுாரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில், ஏப்., 10ம் தேதி 2 சவரன் நகை திருடுபோனது.
இரண்டு பேரும், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் மாமல்லபுரம் வாகன சோதனையில் ஈடுபட்போது, சந்தேக நபர் ஒருவர், போலீசாரிடம் பிடிபட்டார்.
விசாரணையில், மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்துாரை சேர்ந்த சதீஷ் என்ற சரவணன், 28, என்பதும், கடம்பாடி, பையனுார் வீடுகளில் திருடியதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.