/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலைகளில் உலவும் மாடுகளை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு சாலைகளில் உலவும் மாடுகளை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சாலைகளில் உலவும் மாடுகளை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சாலைகளில் உலவும் மாடுகளை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சாலைகளில் உலவும் மாடுகளை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 19, 2024 12:26 AM

செங்கல்பட்டு:சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு சப்- - கலெக்டர் நாராயணசர்மா உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில், மாடுகள் சுதந்திரமாகஉலா வருகின்றன. இதனால், அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு, பலர் இறந்துள்ளனர்.அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை இணைந்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். அதோடு, பிடிக்கப்படும் மாடுகளை, கொண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள மாவட்ட கால்நடை அடைக்கும் பட்டியில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், சப்- கலெக்டர் நாராயணசர்மா தலைமையில், செங்கல்பட்டு சப்- - கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சி பகுதி மற்றும் காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஊரக பகுதிகளுக்குட்பட்ட இடங்களில், மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். அதன்பின், பிடித்த மாடுகளை கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும். மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாடு வளர்ப்போர், தங்கள் இல்லங்களிலேயே பாதுகாப்பான முறையில் வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சப்- - கலெக்டர் நாராயண சர்மா உத்தரவிட்டார்.